Pages

Wednesday 31 August 2016

தமிழ் காக்கும் தகுந்த வழி - புதுக்கவிதை



           தமிழ் காக்கும் தகுந்த வழி
                 புதுக்கவிதை 
             மதுரை கங்காதரன்

         தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழர்கள் தள்ளிவிடுவதால்
தள்ளாடும் தமிழ்மொழியினை
தாங்கிப் பிடிக்க பல கரங்களைத்
தருவாய் தமிழ்த்தாயே!

தமிழென்ன கண்காட்சிப் பொம்மையா?
தமிழர்களிடமே கூவி கூவி விற்பதற்கு!
தன்மானம் இழந்திடும் தமிழர்களை
தமிழ்த்தாயே காத்திடுவாயாக!

           தமிழ் காக்கும் தகுந்த வழி

பேச்சில் எழுத்தில் தனித்தமிழ் வாசனை இல்லை
நடையில் உடையில் தமிழனின் அடையாளம் இல்லை
ஊடங்கங்கள் அனைத்திலும் ஆங்கிலமொழிக் கலப்பு
தமிழர்கள் தருவதோ சிவப்புக் கம்பள வரவேற்பு 
 
விழியில்லாருக்கு வழி காட்டுவது அறிவுடைமை
விழி உள்ளோர் வழி தவறுவது மடமை தானே
சொர்க்கமாய் தமிழ்வீட்டு முகவரி இருக்க
சொந்தமில்லா ஆங்கிலவீட்டில் அடிவைக்கலாமா?  

அந்நிய மொழிக் காட்டுத்தீயில் கருகுது தமிழ்
அலைபேசி கணினி சுனாமியில் மூழ்குது தமிழ்
இணையதளத்தில் அதிகப் படைப்பில்லாதத் தமிழ்
.மெயிலில் தகவல் பரிமாற்றமில்லாதத் தமிழ்

அன்று ஆமையான தமிழ், ஆங்கில முயலை வென்றது
இன்று ஆங்கில முயல் தமிழ் ஆமையை வெல்கிறது
கணினி விழிப்புணர்வு தமிழனுக்கு தந்திட வேண்டும்
கணித்தமிழ் வளர்க்க அரசு அக்கறை காட்ட வேண்டும்

கணினித் தமிழை எளிதாக்கிட வேண்டும்
கணித்தமிழை தமிழறிஞர்கள் கற்றிட வேண்டும்
பள்ளியில் கணித்தமிழை புகுத்திட வேண்டும்
படைப்புகள் பல இணையதளத்தில் தந்திட வேண்டும்

கணினி இல்லாதது அந்தக் காலம்
கணினி உருவானது இந்தக் காலம்
கணினி மயமாகும் வருங்காலம்
கணித்தமிழ் கற்பதே நல்ல காலம்

உலகம் சுற்றும் தமிழாக 
உருவாகுமே கணினித் தமிழாலே
கணித்தமிழை வளர்த்தாலே
காக்கப்படுமே தமிழ்மொழி!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

No comments:

Post a Comment