Pages

Wednesday 12 March 2014

திசை மாறி தாவுகின்ற மனம்! - மனம் போல வாழ்வு ! WHY MIND IS CHANGING ?

திசை மாறி தாவுகின்ற மனம்! - மனம் போல வாழ்வு ! 
                 WHY MIND IS CHANGING ?
                  
                         புதுக்கவிதை 
                    
                     மதுரை கங்காதரன் 

                 
மனிதன்  மாறுவது அது காலத்தின் கட்டாயம் 
அவனின் குணங்கள் மாறுவது சூழ்நிலைகளின் ஆதிக்கம் 

அலை பாயும் நிலையில்லா மனதை யாரால் அணை போட முடியும்  
திசை மாறி தாவும் மனதை யாரால் அறிய முடியும்?

                

மனம் சுகத்தை தேடித் தாவுது 
மனம் ஆசை நாடி ஓடுது 

செயல் ஒன்றில் இருக்கும்போது மனம் 
ஏனோ வேறொன்றில் தாவுது! 

கண்கள் படிக்கும் போது மனம் 
ஏனோ விளையாட்டில் தாவுது 

விளையாட்டில் கவனம் செலுத்தும்போது மனம் 
ஏனோ படிப்பில் தாவுது 

                      

ஊர் சுற்றும்போது மனம் 
ஏனோ வேலையில் தாவுது 

வேலையில் லயிக்கும் மனம் 
ஏனோ ஊர் சுற்றத் தாவுது 

மணமாகாத வாழ்க்கை வாழும்போது மனம் 
ஏனோ குடும்ப வாழ்க்கைக்குத் தாவுது 

               

குடும்ப வாழ்கையில் இருக்கும்போது மனம் 
ஏனோ மணமாகாத வாழ்க்கைக்குத் தாவுது   

இளைஞராய் இருக்கின்ற போது மனம் 
ஏனோ வயதாவதற்குத் தாவுது 

வயதாகின்றபோது மனம் 
ஏனோ இளமையை நோக்கித் தாவுது 

        

காதல் கொள்ளும் வயதில் மனம் 
ஏனோ கடமையை செய்யத் தாவுது 

கடமையில் மூழ்கி கிடக்கும்போது மனம் 
ஏனோ காதல் கடலில் நீந்தத் தாவுது 

வெயிலில் காய்கின்ற போது மனம் 
ஏனோ குளிர் காயத் தாவுது 

குளிரில் உடல் நடுங்கும்போது மனம் 
ஏனோ வெயிலில் காயத் தாவுது 

மணமான இளமை அனுபவிக்கும்போது மனம் 
ஏனோ குழந்தை பெறத் தாவுது 

குழந்தை பெற்ற பின்னே மனம் 
ஏனோ இளமை அனுபவிக்கத் தாவுது 

            

இவன் கஷ்டமாக வேலை செய்யும்போது மனம் 
ஏனோ அவன் பார்க்கும் வேலை எளிதெனத் தாவுது 

அவன் பார்க்கும் வேலைக்குச் சென்ற பின்னே மனம் 
ஏனோ இவன் பார்த்த வேலை எளிதெனத் தாவுது 

வாழ்க்கை வாழுகின்றபோது மனம் 
ஏனோ இறப்பதற்குத் தாவுது 

இறக்கும் நேரம் வருகின்றபோது மனம் 
ஏனோ வாழ்கையை வாழத் தாவுது  

மனம் தாவும் திசைகளில் நீ போனால் 
மனம் போல வாழ்வு கிடைக்காது போகும் 

நீ போகும் திசையில் மனத்தை திருப்பினால் 
மனம் போல வாழ்வு கிடைப்பது உறுதி 

              

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
  

No comments:

Post a Comment