Pages

Wednesday 26 March 2014

நீங்கள் சாதாரணமானவரா ? அசாதாரணமானவரா ? ARE YOU AN ORDINARY OR EXTRA ORDINARY PERSON ?

   நீங்கள் சாதாரணமானவரா?                                               அசாதாரணமானவரா?
                         

ARE YOU AN ORDINARY/EXTRA ORDINARY PERSON ?

                    புதுக்கவிதை
                
             மதுரை கங்காதரன் 

நீங்கள் பிறருக்கு ஓட்டு போடுவது சாதாரணம்
நீங்கள் பிறரின் ஓட்டுக்களை வாங்குவது அசாதாரணம்

நீங்கள் சின்னத்திரை பார்ப்பது  சாதாரணம்
நீங்கள் சின்னத்திரையில் தோன்றுவது அசாதாரணம்

நீங்கள் திரைப்படத்தை ரசிப்பது சாதாரணம்
நீங்கள் திரைப்படத்தில் நடித்து பிறர் ரசிப்பது அசாதாரணம்

நீங்கள் நடிக நடிகையர்களை புகழ்வது சாதாரணம்
நீங்கள் நடித்து பிறர் உங்களைப் புகழ்வது அசாதாரணம்

                       

நீங்கள் வேலைக்குச் செல்வது சாதாரணம்
நீங்கள் பலருக்கு வேலை கொடுப்பது அசாதாரணம்

நீங்கள் கல்வியைக் கற்பது சாதாரணம்
நீங்கள் பலருக்கு கல்வி கொடுப்பது அசாதாரணம்

நீங்கள் சம்பாதித்து அதில் வாழ்வது சாதாரணம்
நீங்கள் சம்பாதித்ததை தானமாக கொடுப்பது அசாதாரணம்

நீங்கள் இலவசங்களைப் பெறுவது சாதாரணம்
நீங்கள் மக்களுக்கு இலவசமாகக் கொடுப்பது அசாதாரணம்

நீங்கள் கணினியில் விளையாடுவது சாதாரணம்
நீங்கள் கணினியில் புதிய விளையாட்டு கொடுப்பது அசாதாரணம்

                            

நீங்கள் இயந்திரங்களைப் பயன்படுத்துவது சாதாரணம்
நீங்கள் புதிய இயந்திரங்களை வடிவமைப்பது அசாதாரணம்

நீங்கள் கதை கவிதை ஓவியங்களை ரசிப்பது சாதாரணம்
நீங்கள் கதை கவிதை ஓவியம் வரைவது அசாதாரணம்

நீங்கள் ருசியாக சாப்பிடுவது சாதாரணம்
நீங்கள் ருசியாக சமைப்பது அசாதாரணம்

நீங்கள் பிறர் முதுகில் சவாரி செய்வது சாதாரணம்
நீங்கள் சொந்தக்காலில் நிற்பது அசாதாரணம்

                          

நீங்கள் பணத்தினைப் பெற்று காரியம் செய்வது சாதாரணம்
நீங்கள் அன்புகொண்டு இலவசமாக காரியம் செய்வது அசாதாரணம்

நீங்கள் பலவற்றைப் படிப்பது சாதாரணம்
நீங்கள் பலர் படிக்கும்படி எழுதிப் படைப்பது அசாதாரணம்

நீங்கள் பணத்தை செலவு செய்வது சாதாரணம்
நீங்கள் பணத்தை சேமிப்பது அசாதாரணம்

நீங்கள் சராசரியாக / குறைவாக வாழ்வது சாதாரணம்
நீங்கள் அருமையான மனிதனாக வாழ்வது அசாதாரணம்

                                           

நீங்கள்  சுயநலமாக இருப்பது சாதாரணம்
நீங்கள் பொதுநலச் சேவை செய்வது அசாதாரணம்

நீங்கள் உறவுகளை பெற்றோர்களை உதறுவது சாதாரணம்
நீங்கள் எல்லா உறவுகளைக் கொண்டு வாழ்வது அசாதாரணம்

நீங்கள் பணத்திற்காக நட்பை இழப்பது சாதாரணம்
நீங்கள் நட்புக்காக பணத்தை இழப்பது அசாதாரணம்

நீங்கள் காதல் செய்வது சாதாரணம்
நீங்கள் காதலை கல்யாணத்தில் முடிப்பது அசாதாரணம்

நீங்கள் வாழ்கை வாழ்வது சாதாரணம்
நீங்கள் பிறர் மெச்சும்படி வாழ்வது அசாதாரணம்

                            

நீங்கள் உனக்காக வெளிச்சம் ஏற்றிக்கொள்வது சாதாரணம்
நீங்கள் ஊருக்கு வெளிச்சம் கொடுப்பது அசாதாரணம்

நீங்கள் உங்களுக்காக வாழ்வது சாதாரணம்
நீங்கள்  பிறருக்காக வாழ்வது அசாதாரணம்

நீங்கள் பிறரிடம் ஆட்டோகிராப் வாங்குவது சாதாரணம்
நீங்கள் பிறருக்கு ஆட்டோகிராப் போடுவது அசாதாரணம்

நீங்கள் பிரச்சனையில் வாழ்வது சாதாரணம்
நீங்கள் பிரச்சனை சமாளித்து / இல்லாமல் வாழ்வது அசாதாரணம்

                             
நீங்கள் முடியாது என்று நம்பிக்கையில்லாமல் இருப்பது சாதாரணம்
நீங்கள் முடியும் என்று தன்னம்பிக்கையோடு இருப்பது அசாதாரணம்

நீங்கள் செய்கின்ற வேளையில் தோல்வி வருவது சாதாரணம்
நீங்கள் செய்யும் வேலையில் வெற்றி பெறுவது அசாதாரணம்

நீங்கள் சோம்பேறியாய் இருப்பது சாதாரணம்
நீங்கள் விடாமுயற்சி செய்வது அசாதாரணம்

நீங்கள் கடினமான வேலைகளை செய்யாமல் இருப்பது சாதாரணம்
நீங்கள் கனமானவேலைகளை செய்து முடிப்பது அசாதாரணம்

நீங்கள் கனவில் கோட்டை கட்டுவது சாதாரணம்
நீங்கள் கனவுகளை நனவாக்குவது அசாதாரணம்

                      

நீங்கள் இல்லறத்தில் நுழைவது சாதாரணம்
நீங்கள் இல்லறத்தை நல்லறமாக அமைப்பது அசாதாரணம்

நீங்கள் பொய் பேசி புகழடைவது சாதாரணம்
நீங்கள் உண்மை பேசி புகழ் சேர்ப்பது அசாதாரணம்

நீங்கள் கெட்டப்பழக்கத்திற்கு அடிமையாவது சாதாரணம்
நீங்கள் நல்ல பழக்கங்களை கொள்வது அசாதாரணம்

நீங்கள் கெட்டவராக மாறுவது சாதாரணம்
நீங்கள் நல்லவனாக வாழ்வது அசாதாரணம்

                

நீங்கள் நல்லநேரத்திற்க்காக காத்திருப்பது சாதாரணம்
நீங்கள் எல்லா நேரத்தையும் நல்ல நேரமாக்குவது அசாதாரணம்

நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்பியிருப்பது சாதாரணம்
நீங்கள் சொந்த உழைப்பை நம்புவது அசாதாரணம்

நீங்கள் ஏமாற்றி பெரும்பணம் சம்பாதிப்பது சாதாரணம்
நீங்கள் பிறர் பொருளை தீண்டாமல் இருப்பது அசாதாரணம்

நீங்கள் பிறர் தயவில் சுகமாக வாழ்வது சாதாரணம்
நீங்கள் பிறருக்கு சுகமான வாழ்வு தருவது அசாதாரணம்

                     

நீங்கள் எதையுமே கற்பது சாதாரணம்
நீங்கள் கற்றபடி நடப்பது அசாதாரணம்

நீங்கள் சாதாரணமானவரா? 
நீங்கள் அசாதாரணமானவரா ?

 

                                          நன்றி ...... வணக்கம்......

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

No comments:

Post a Comment