Pages

Wednesday 2 May 2018

29.4.18 பாரதிதாசன் 127வது பிறந்தநாள் விழா & மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்


29.4.18 பாரதிதாசன் 127வது பிறந்தநாள் விழா & 
மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் 


அன்று நான் வாசித்தக் கவிதை இதோ...
வழக்கிழந்து வரும்மொழிகள் வரிசையிலே தமிழ்வருது
மொழிந்தது ஏன்? ஐநாதான் முயன்றாய்ந்து கவிதையாக்கு!
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்    

 தமிழ்த்தாய் வாழ்த்து

வண்டமரும் தமிழ் பூஞ்சோலையில்
வற்றாமல் தேன்தமிழ் சுவைக்கவும்
பொழிவு கொடுக்கும் தமிழ்தீபத்தைப்
போற்றி வணங்குகிறேன் தமிழ்த்தாயை.

வழக்கிழந்து வரும்மொழிகள் வரிசையிலே தமிழ்வருது
மொழிந்தது ஏன்? ஐநாதான் முயன்றாய்ந்து கவிதையாக்கு!

குமரிக்கண்டத்தில் தமிழ் பிறந்தது - அதோடு
கடல் கடந்து பலநாடுகளில் வளர்ந்தது
கண்ணடிப் பட்டதால் என்னவோ - தமிழ்மொழி
கல்லடிப் பட்டுக் இரணமாய் நிற்கிறது.  

இறந்தகாலம் நமக்கு கற்பிப்பது - எல்லாம்
இழந்தபின்பே ஞானம் வருமென்று.
ஐநாஉம் எச்சரித்து வருது - தமிழ்மொழி 
அழியும்காலம் நெருங்கி விட்டதென்று.

ஏழைசொல் அம்பலத்தில் ஏறாது - அஃதானால்
ஐநாசொல்லும் இதயத்தில் நுழையவில்லையே.
தமிழ்மொழியைக் காப்பது யார்? - விடை
தமிழனின்றி வேறு யாராலே முடியும்?

காக்கும் அறிஞர்களைக் கேலி செய்யுது - தவிர
தூக்கும் தமிழனைக் கிண்டல் செய்யுது 
நல்லார் தமிழினை நக்கல் செய்யுதுகூடவே 
வல்லார் செயலை நையாண்டி செய்யுது.

தமிழின் பயன்பாடு தடம்மாறிப் போகுது - இன்று
தமிழைப் பேசஎழுதக் கூச்சப்படுது.
தமிழைக் கற்க வெட்கப்படுது - அதில்லாமல்
தமிழனென்று சொல்லிட அச்சப்படுது.
*********************

 மின்படங்கள் 



















































































#####################

No comments:

Post a Comment