Pages

Monday 26 March 2018

தமிழ்த்தாயை மதித்தெழுந்து தலைவணங்க மறுத்தமர்ந்தார்

தமிழ்த்தாயை மதித்தெழுந்து தலைவணங்க மறுத்தமர்ந்தார்








தமிழ்த்தாயை மதித்தெழுந்து தலைவணங்க மறுத்தமர்ந்தார்
சமற்கிருத எழுத்துன்றன் சிறந்ததமிழ் மொழிக்கெதற்கு

புதுக்கவிதை   மதுரை கங்காதரன்   

அவையில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தால்
அறிவுடையோர் மதித்து எழுந்து நிற்பர்.
அவ்வேளை அமர்ந்து அவமதிப்பு தந்தால்
அருந்தமிழர்கள் எங்ஙனம் அமைதி காப்பர்?   

சட்டிக்கும் பானைக்கும் செவிகள் இல்லை
சங்கு ஊதினாலும் மௌனம் காக்கும்
அவையோர் மதித்தெழுந்து தலைவணங்கினர்
இவரோ அமைதி கொண்டு அமர்ந்தாரே!

தமிழும் சமற்கிருதமும் மொழிகளின் சாதி
தாழ்வென்றும் உயர்வென்றும் இல்லாத விதி
தாழ்ந்தமொழித் தமிழென எண்ணும் நியதி
தமிழர்களுக்குத் தமிழர்களே செய்யும் சதி.

தமிழ் பேச்சில் அந்நியமொழி கலப்பு
தமிழில் கிரந்த எழுத்துகள் திணிப்பு
பொறுமை காத்ததுப் போதுமென சொல்வோம்
பொங்கி எழுந்து தமிழழிவதைத் தடுப்போம்.

குனியக் குனிய முதுகில் கூன்விழும்
வெட்ட வெட்ட மாமரமும் சாயும்
ஊர ஊரக் கல்லும் தேயும்
ஒதுக்க ஒதுக்க தமிழும் வீழும்.
             ********



No comments:

Post a Comment