Pages

Monday 26 March 2018

25.3.18 விருதுநகரில் 'விருதை மலர்' நடத்திய சிறுகதைப் போட்டி

நேற்று 25.3.18 அன்று விருதுநகரில் 'விருதை மலர்' நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்கள் அனைவருக்கும் பொற்கிழியும் பரிசாகச் சில நூல்களும் (கீழே கடைசிப் படம் பிடித்து இருக்கிறேன்) வழங்கி கௌரவித்தார்.

எனது கதையான 'ஆதாம்-ஏவாள்' என்கிற சிறுகதை ஆறுதல் பரிசு கிடைத்தது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பினை 'விருதை மலர்' ஏற்படுத்தித் தந்தமைக்கு அனைவரின் சார்பில் நன்றி கலந்த வணக்கத்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கவிதைப்போட்டி அறிவிப்பு வந்திருக்கின்றது ... கவிஞர்கள் .. தமிழ் ஆர்வலர்கள் தங்கள் கவிதையினை அனுப்பும்படி மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்று நடந்த விழாவின் சில மின்படங்கள் .. உங்களுக்காக இதோ...





















































*******************

தமிழ்த்தாயை மதித்தெழுந்து தலைவணங்க மறுத்தமர்ந்தார்

தமிழ்த்தாயை மதித்தெழுந்து தலைவணங்க மறுத்தமர்ந்தார்








தமிழ்த்தாயை மதித்தெழுந்து தலைவணங்க மறுத்தமர்ந்தார்
சமற்கிருத எழுத்துன்றன் சிறந்ததமிழ் மொழிக்கெதற்கு

புதுக்கவிதை   மதுரை கங்காதரன்   

அவையில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தால்
அறிவுடையோர் மதித்து எழுந்து நிற்பர்.
அவ்வேளை அமர்ந்து அவமதிப்பு தந்தால்
அருந்தமிழர்கள் எங்ஙனம் அமைதி காப்பர்?   

சட்டிக்கும் பானைக்கும் செவிகள் இல்லை
சங்கு ஊதினாலும் மௌனம் காக்கும்
அவையோர் மதித்தெழுந்து தலைவணங்கினர்
இவரோ அமைதி கொண்டு அமர்ந்தாரே!

தமிழும் சமற்கிருதமும் மொழிகளின் சாதி
தாழ்வென்றும் உயர்வென்றும் இல்லாத விதி
தாழ்ந்தமொழித் தமிழென எண்ணும் நியதி
தமிழர்களுக்குத் தமிழர்களே செய்யும் சதி.

தமிழ் பேச்சில் அந்நியமொழி கலப்பு
தமிழில் கிரந்த எழுத்துகள் திணிப்பு
பொறுமை காத்ததுப் போதுமென சொல்வோம்
பொங்கி எழுந்து தமிழழிவதைத் தடுப்போம்.

குனியக் குனிய முதுகில் கூன்விழும்
வெட்ட வெட்ட மாமரமும் சாயும்
ஊர ஊரக் கல்லும் தேயும்
ஒதுக்க ஒதுக்க தமிழும் வீழும்.
             ********