Pages

Monday 24 July 2017

21.7.17 உலகத் தமிழ்ச் சங்கம் , மதுரை. கவியரங்கம் - பாரதி ...தீ .. மின்படங்கள்

21.7.17 உலகத் தமிழ்ச் சங்கம் , மதுரை. 
கவியரங்கம் - பாரதி ...தீ .. மின்படங்கள் 




நான் (கு.கி.கங்காதரன்) வாசித்த கவிதை  

தமிழுக்கும் தமிழ்த்தாய்க்கும் வணக்கம்                                         

தமிழைக் கவிகளாலும் வளர்ப்போம்
தமிழை அழியாமலும் காப்போம்
தமிழனின் அடையாளம் தமிழென
தரணியெங்கும் பறைச்சாற்றுவோம்.

              பாரதி.... தீ

கவிகளால் வானத்தைத் தொட்டவர்
கனவுகளால் சுதந்திரத்தை வித்திட்டவர்
எண்ணங்களால் இதயத்தில் நிலைத்தவர்
எந்நாளும் கவிஞர்களுக்கு முதல்வர். 

சுதந்திரத் தாகத்தைக் கவிதைகளால்
சுந்தரத்தமிழால் மக்களை உசுப்பியவர்
இந்தியாநாளைய வல்லரசு முழக்கத்தை
அப்துல் கலாம் வழியாக வித்திட்டவர்.

காலனை வெல்லாமல் போயிருக்கலாம்
கவிஞர்களின் மனங்களை வென்றிருக்கிறாய்
பல பாரதிகளை இங்கு பார்க்கிறேன்
பல கவிதைகளை இவ்விடம் சுவைக்கிறேன்.

கவிகளில்
சிறப்புக் கூடினால் மதிப்பு கூடும்
மதிப்புக் கூடினால் வாழ்த்து கூடும்
வாழ்த்து கூடினால் வளம் கூடும்
வளம் கூடினால் புகழ் கூடும்.

பாரதி கவிதைகளோ
அடிமை செய்வோரை அக்கினியாய்ச் சுடும்
உரிமை மறுப்போர்களை குண்டுகளாய் துளைக்கும்    
மடமை எண்ணங்களைத் தீயிலிட்டுப் பொசுக்கும்
கடமைத் தவறுவோர்களைக் கனலாய்க் கக்கும் 

புதுமைப் பெண் சரித்திரத்தைத் தொடங்கி வைத்தாய்
புதுக்கவி அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தாய்
புதுப்பாரதக் கனவை மெய் படுத்தினாய்
பூவுலகில் மங்காப் புகழைப் பெற்றுவிட்டாய்.

 நன்றி, வணக்கம்.































































































































நன்றி... வணக்கம் ...