Pages

Friday 19 August 2016

AN EASY WAY TO DETECT MISSING FLIGHT IN THE SEA…

AN EASY WAY TO DETECT 
MISSING FLIGHT IN THE SEA…
கடலில் காணாமல் போகும் விமானங்களை எளிதாகக் கண்டுபிடிக்க
விழிப்புணர்வுக் கட்டுரை

மதுரை கங்காதரன்

தகவல் தொழிநுட்ப வளர்ச்சி அபரிதமாக முன்னேற்றமடைந்து இருக்கும் கணினி யுகத்தில், சமீபமாக விமானங்கள் கடலைக் கடக்கும் போது காணாமல் போவது மட்டுமில்லாமல் அவைகள் எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போவது என்பது பெரிய ஏமாற்றத்தைத் தருவது ஒன்றாகும். அது நம்முடைய அறிவுக்கும், விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால் என்றே தோன்றுகின்றது.
ஏனென்றால் 2014 ல் 227 பயணிகளுடன் 8 மார்ச்  2014 ல் 227 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட மலேசிய ஏர் லைன்ஸ் 370 விமானம் கடலில் விழுந்துக் காணாமல் போனது. அதேபோல் இந்த வருடம் 22 ஜூலை 2016ல் 29 பேருடன் ஆன்டனோவ் ஏ-என் 32 என்கிற இந்திய இராணு விமானம், வங்காள விரிகுடா கடல் பகுதியில் பறக்கும் போது அதில் பயணம் செய்த அனைவரும் கடலில் விழுந்து காணாமல் போனார்களா? அல்லது என்ன ஆனார்கள் என்பது இது வரையில் அறிந்திடாத புதிராக இருக்கின்றது.
இத்தகைய நிகழ்வுகள் வருங்காலத்திலும் தொடராது என்பது என்ன நிச்சயம்? அப்படி ஒருவேளை நிகழ்ந்தால் அதற்கான தீர்வு இருக்கின்றதாநிலத்தில் விமானம் விழுந்தால் எப்படியேனும் கண்டுபிடித்துவிடலாம். அதாவது நிலத்தில் விழும் நொறுங்கிய பாகம் நம் கண்ணிற்கு தெரிந்துவிடும். அந்த இடத்தைச் சுற்றிலும் தேடிப் பார்த்தால் விமானத்தின் 'கறுப்புப் பெட்டி' (Black Box) கட்டாயம் கிடைக்கும். அதன் மூலமாக விமான விபத்துக்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம். ஒரு விமானம் கடலைக் கடக்கும்போது விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அதன் இடத்தைக் கண்டுபிடிப்பது?

பொதுவாக இந்த மாதிரிப் பிரச்சனை ஏற்பட்டால் தொழில்நுட்ப வல்லுனர்னர்கள் (Technical Experts) கொடுக்கின்ற தீர்வானது மிக எளிமையாக அதே சமயத்தில் மிகவும் துல்லியமாக இருப்பதோடு, அதிக செலவாகாமல் உடனே எல்லா விமானத்தில் செயல்படுத்த முடியுமாறு இருக்க வேண்டும். அந்த வகையில் இணையதளத்தில் (Internet) தேடும்போது, இதற்கு மூன்று தீர்வுகளைக் கொடுத்திருப்பது தெரியவந்தது. அதனைச் சுருக்கமாகச் சொல்வதென்றால், முதலாவது தீர்வு, விமானம் கடலில் மூழ்கியவுடன் 'கறுப்புப் பெட்டி' தானாக இஜக்ட் (Eject) ஆகி மேலே வரும்படி செய்ய வேண்டும். இரண்டாவது தீர்வு, விமானம் மூழ்கியவுடன் விமானத்திலிருந்து அல்ட்ரா சோனிக் ஒலி சமிஞ்ஞை (Ultra Sonic Signal) எற்படுமாறு செய்திட வேண்டும். மூன்றாவது தீர்வுமேலே பறக்கின்ற ஒவ்வொரு விமானங்கள் மற்ற விமானங்களுடன் தொடர்பில் (Inter flight links) இருக்க வேண்டும். ஏதாவது ஒரு விமானம் பிரச்சனையில் இருப்பது தெரியவந்தால் அதை சம்பந்தப்பட்ட கண்ட்ரோல் ரூமுக்கு (Control room) அந்த தொடர்பில் இருக்கும் விமானம் தெரியப்படுத்த வேண்டும். இவைகளை நடைமுறைப் படுத்துகின்ற சாத்தியக் கூறுகள் எந்த அளவுக்கு இருக்கின்றது என்பது போகப்போகத் தெரியும்.

என்னுடைய எளிய யோசனை:
ஒவ்வொரு விமானத்தில் உயரம் காட்டும் கருவி இருக்கின்றது. விமானம் விபத்துக்குள்ளானால் அது கட்டாயம் மிகக் குறைந்தளவு உயரத்தில் (Minimum Height)  அல்லது  பூஜ்யம் (Zero) அளவுக்கு பறந்திருக்க வேண்டும். அந்த குறைந்த அளவு உயரத்தில் பறக்கும் போது, அந்த சமயம் ஒரு 'சென்ஸார்' (Sensor) உணர்ந்து விமானத்தின் கீழ்பகுதியிலிருந்து மிதக்கும் ஒளியூட்டும் (Fluorescent) தன்மையுடைய பந்துகள் (Balls), குச்சிகள் (Sticks) தானாக வெளிவரச் செய்ய வேண்டும். அவைகள் மரத்தாலானதோ (Wooden), ரப்பர் (Rubber), பிளாஸ்டிக் (Plastics), மெல்லிய உலோகத்தாலும் (Light Metals) இருக்கலாம். அதன் மேல் கட்டாயம் விமானத்தின் பெயரும், எண்ணும், வேறு பல தகவல்கள் அதாவது தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் அச்சடிக்கப்பட்டோ அல்லது ஸ்டிக்கரில் ஒட்டப்பட்டோ இருக்க வேண்டும். 

கடலில் ஒரு விமானம் விழுவதாக வைத்துக் கொள்வோம். அது குறைந்தபட்ச உயரத்தில் பறக்கும் போது ஒரு சென்ஸார் அதை உணர்ந்து , தானாக ஹைட்ராலிக் முறையில் (Hydraulic) இயங்கும் கதவு உடனே திறக்கச் செய்ய வேண்டும். அதன் வழியாக மிதக்கும் பொருட்களை வெளியில் விழும்படி செய்திட வேண்டும். விமானம் கடலில் மூழ்கினாலும் அந்த மிதக்கும் பொருட்கள் விழுந்த இடத்தை எளிதாகக் காட்டிவிடும். அவ்வளவு எளிதாக, வேகமாக மிதக்கும் பொருட்கள் கரையினை அடையாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.    

ஒரு குறிப்பிட்ட நிமிடத்தில் விமானம் கடலுக்குள் மூழ்கியோ அல்லது நிலத்திலோ விழுந்ததை அல்லது காணாமல் போனது தெரியுமானால் இந்த மிதக்கும் பொருட்கள் அதன் இடத்தைக் காட்டிவிடும். ஒரு சில நிமிடத்தில் அங்கு சென்றால் அனைவரையும் காப்பாற்றும் வாய்ப்பு கிடைக்குமல்லவா! அதே சமயம் சரியாக விமானம் தரையிறங்கினால் இந்த தானியக்கியை அணைத்துவிட வேண்டும்.      
            
உங்களுக்கு இது போன்ற யோசனை ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்தலாமே!  
*********************************

No comments:

Post a Comment