Pages

Friday 14 August 2015

டாக்டர் APJ அப்துல்கலாமின் விண்ணுலகப் பயணம்

           Dr. APJ.ABDHUL KALAM’S SPACE JOURNEY
டாக்டர் APJ அப்துல்கலாமின் விண்ணுகப் பயணம்
                                         புதுக்கவிதை
                                   மதுரை கங்காதரன்
        
                            

இளைஞர்களின் இதயத்தில் வாழ்பவர்
அரசியலில் இமயமாய் நிற்பவர்
மண்ணுலகை வெற்றி கொண்டவர்
விண்ணுலகையும் பெருமை படைப்பார்

இந்தியாவை அடையாளம் காட்டியவர்
தமிழர்களுக்கு உதாரணமாய் இருப்பவர்
அப்துல்கலாம் எனும் மனித வைரம்
அகிலத்தில் பிரகாசிக்கும் ஒளிவிளக்கு

ஏழ்மை குடியில் பிறந்து
விண்வெளி விஞ்ஞானியாய் படித்து
இந்திய ஜனாதிபதியாய் பதவி வகித்து
வல்லரசு இந்தியா கனவை விதைத்தவர்.

இந்தியாவின்
தெற்கில் பிறந்து
கிழக்கில் படித்து
மேற்கில் சாதனை படைத்து
வடக்கில் மறைந்தவர்.

பழகுவதில் எளிமை
குணத்தில் நேர்மை
செயலில் புதுமை
எண்ணத்தில் தூய்மை

அப்துல்கலாம்! நடமாடும் அறிவுப் பொக்கிஷம்
ஆசிரியராய் இளைஞர்களுக்கு வழிகாட்டியவர்
விஞ்ஞானியாய் அறிவியல் துறையில் சாதித்தவர்
ஜனாதிபதியாய் அரசியலில் முன்மாதிரியானவர்

போலியோ பாதித்தவர்களுக்கு இலேசான உலோக கருவி
இதயநோய் பாதித்தவர்களுக்கு பேஸ்மேக்கர் கருவி
இளைஞர்களுக்கு 'அக்னிச் சிறகுகள்' படைத்தவர்
இலக்கியத்திற்கு 'எனது பயணம்' கவிதை வடித்தவர்

சாதிகளை மறந்து மாமனிதனாக திகழ்ந்தவர்
மதங்களைத் தாண்டி சமமாக மதித்தவர்
மொழிகளைக் கடந்து அன்பு காட்டியவர்
இனங்களின் தடைகளை தகர்தவர்

வாழும் காலத்தில் இளைஞர்களுக்காக உழைத்தவர்
இறுதி மூச்சு நின்றபோதும் இந்தியாவை மறக்காதவர்
தன் அறிவும் திறமையும் இந்தியாவுக்கே அர்ப்பணித்தவர்
தனிமனிதனாய் பல சாதனை படைத்த மாமனிதன்

இளைஞர்களை மதிப்போம்
அந்நிய மோகத்தினை விரட்டுவோம்
இந்தியாவை வல்லரசாக ஆக்குவோம்
அப்துல்கலாமின் கனவை நனவாக்குவோம்

=========================================================



MULTI FACES OF BHARATHI DASAN - பாரதிதாசனின் பன்முகம்

              MULTI FACES OF BHARATHI DASAN  
                     பாரதிதாசனின் பன்முகம்
                                       புதுக்கவிதை
                       மதுரை கங்காதரன்

                       
                       

பாரதிதாசரே!
நீவீர்  புதுவை சிப்பிக்குள் பிறந்த முத்தான தமிழர்
புதுக்கவிதைத் தேரை வடம் பிடித்து இழுத்தவர்
பெண்விடுதலைக்கு பாரதிக்கு நிகராய் நின்றவர்
'பாவேந்தர்' பட்டத்திற்குச் சொந்தக்காரர்.

வாசிப்புக்கு இதமான கவிதைகள்
சுவாசிக்க வைக்கும் துடிப்புகள்
நேசிக்கச் செய்யும் நடைகள்
சிந்திக்க வைக்கும் பல படைப்புகள்.

ஈராண்டில் பட்டப் படிப்பை முடித்த அறிவுச் சுடர்
விடுதலை வேட்கையை கவிகள் மூலம் தணித்தவர்
அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டியாய் விளங்கியவர்
அமுதான தமிழை வளமான நடையில் தந்தவர்.

பாரதி வழியில் புதுக்கவிதைக்கு முகவரி கொடுத்தவர்
தமிழ் கவிதைகளை உயிர் மூச்சாய் சுவாசித்தவர்
கவிதைகளை திரைப்படத்தில் ஒலிக்கச் செய்தவர்
பட்டிதொட்டி மக்களையும் கவிதையை நேசிக்க வைத்தவர்.

பாடல்களை அமுதாக உயிருக்கு நேராக படைத்தாய்
பாலிற்கும் மேலான சுவை தேனினினும் மேலான இனிமை
பூக்களை மிஞ்சும் மணம் இடியாய் முழங்கிடும் சாட்டையடி வரிகள்
பாரதிக்கு வாரிசாய் மாறினாய் தமிழுக்கு காவலாக இருந்தாய்.

பாரதி கனவுகளை நனவாக்க அரும்பாடுபட்டாய்
சாதி சண்டையில்லா சமுதாயம் ஓங்கிட
அரசியலிலும் ஆதிக்கம் செய்து சாதனைகள் புரிந்தாய்
கவிதைகள் மூலம் சீர்திருத்த சிந்தனைக்கு வித்திட்டாய்.

வளரும் கவிஞர்களுக்கு வழிகாட்டியாய் இருப்பவர்
தேய்ந்து வரும் தமிழ் படைப்புகளால் வளர்த்தவர்
உலகெங்கும் அவர் தமிழ் பற்றை பரப்புவோம்
தமிழ்மொழியின் பெருமையை நிலைநிறுத்துவோம்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%