Pages

Tuesday 10 June 2014

தனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே!

உலகத் தமிழ் ஆய்வுச் சங்கம் , மதுரை 

ஆய்வரங்கம் - கவியரங்கம் 



15.6.14 அன்று உலகத் தமிழ் ஆய்வுச் சங்கம், மதுரை 
               அவர்களால் ஏற்பாடு செய்திருந்த 
                    ஆய்வரங்கம்  - கவியரங்கம் 
(ஒவ்வொரு மாதம்  இப்போது இரண்டாம் ஞாயிறு நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம். வெளியூர் மக்கள் கீழ்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். வெற்றி பெற்றால் பரிசு உண்டு )
                          நிகழ்ச்சியில் நான் பாடிய புதுக்கவிதை 
                                                    மதுரை கங்காதரன் 
தனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே!

உயிர் வாழவைக்கும்  மூச்சுக்கு காற்று அவசியம்  
வாழும் தமிழ்மொழி  பேச்சுக்கு எழுத்துக்கள் அவசியம்  

வான் மழை பெய்வதால் பயிர்கள் செழிக்கும் 
தனித்தியங்கும் தமிழ் எழுத்துக்களால் தமிழ்மொழி சிறக்குமே 

வெற்றிப்படைக்கு தகுதி வாய்ந்த வீரர்கள் வேண்டும் 
சிறந்த மொழிக்கு தனித்தியங்கும் தகுந்த எழுத்துக்கள் வேண்டும்  

அனைத்தும் உள்ளடங்கிய ஒன்றே தனித்தியங்கும் ஆற்றல் பெறும் 
தமிழ்மொழியில்  அனைத்தும் உள்ளடங்கி உள்ளதே 

மனிதன் இயங்க உடல் பொருள் ஆவி வேண்டும் 
தமிழ்மொழி இயங்க இயல், இசை, நாடகமெனும் முத்தமிழ் உள்ளதே 

வெறும் எழுத்துக்களால் ஒரு மொழி தனித்தியங்க போதாது 
பல பரிமாணமுள்ள இலக்கண இலக்கிய நூல்கள் வேண்டுமே    

ஓரடியில்  உலகுக்கு முக்காலமும் பொருந்தும் ஆத்திச்சூடி 
ஈரடியில் முப்பாலில் நான்கு திசைகள் போற்றும் திருக்குறள்

நாலடியில் எளிய உவமையில் தமிழ் நீதி நூல் கொண்ட நாலடியார் 
ஐம்பெரும் காப்பியங்களோ தமிழ்மொழியின் அறுசுவைக்கு  விருந்து 
ஏழேழு ஜென்மங்களில் எட்டா உயரத்தில் நம்மை தட்டிஎழுப்பும் பாரதி பாடல்கள் 
நவரசத்தில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் கம்பராமாயணம் 

தமிழ் பண்பாட்டை எடுத்துரைக்கும் பத்துப்பாட்டு
பத்தோடு முடிந்துவிடவில்லை தமிழ் ! இன்னும் பல உள்ளனவே ! 

பாற்கடலைக் கடையும் போது தேவாமிர்தம் கிடைத்ததாம் 
தமிழ்மொழியைப் படிக்கும்போதெல்லாம் தேனமுதம் சுரக்குமே !  

வண்டி ஓட அச்சாணி வேண்டும் ! வாழ்க்கை ஓட உயிர் தேவை போல் 
உயிராய்  மெய்யாய் தமிழ்மொழியை தனித்தியங்க தகுந்ததென்றும் தமிழ் எழுத்துக்களே ! 

நன்றி 

வணக்கம் ..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

குறிப்பு : இது போல் உங்களது  எல்லாவித தமிழ் படைப்புகள் அதாவது கவிதைகள்  , கட்டுரைகள் ,  கதைகள், சிரிப்புகள், அனுபவங்கள், தமிழ் மொழியின்  சிறப்புகள், புதுமைகள் போன்றவைகள்  .. உங்கள்  தகுதியுள்ள படைப்புகள்  உலகத் தமிழ் ஆய்வுச் சங்கம் , மதுரை வலைதளத்தில் வெளியாகும்.

மேலும் விவரங்களுக்கு www.tamilresearch.in 

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் : gangadharan.kk2012@gmail.com  

உங்கள் ஆலோசனைகளும், உங்கள் பகுதியில் தமிழ் சார்ந்த கூட்டங்களை பற்றிய தொகுப்புகளும் வரவேற்கப்படுகின்றன.

தமிழ் மொழியினை வளர்ப்போம்.

********************************************************************************************     


No comments:

Post a Comment