Pages

Sunday 26 January 2014

சிரி சிரி சிரிப்புகள் - Jokes

சிரி சிரி சிரிப்புகள் - Jokes  
மதுரை கங்காதரன் 



* " இன்ஸ்பெக்டர் ஐயா , என்னோட நூறு பவுன் நகை , ஒரு லட்சம் ரூபா திருடங்க திருடிட்டாங்க. நீங்க தான் உடனே கண்டுபிடிச்சு தரனும் "

" அந்த நகை, பணம் எப்படி கிடைத்தது"

" முக்கு வீட்டிலே நான் திருடியது சார்"


**************************************************************************

* தேவலோகத்தில் 

 "பிரபு ! இந்த திருடன் திருடிய நூறு பவுன் நகையிலே  இந்த இன்ஸ்பெக்டர் ஐம்பது பவுன் நகைகள் எடுத்துக்கொண்டான் பிரபு !"

" அடப்பாவி, திருடிய எனக்கு திருட்டுப் பட்டம். என்னிடம் திருடிய உனக்கு இன்ஸ்பெக்டர் பதவியா? இந்த கொடுமை எப்படி பூலோகவாசிகளிடம் சொல்வது?"

**************************************************************************

" தலைவரே! எதுக்காக பையன் அடம்பிடிக்கிறான்"

" உலகம் சுத்திப்பார்க்க வேண்டுமாம். கொஞ்சம் வயசாகட்டும் !  ஜனாதிபதி பதவி கிடைச்ச பிறகு சுத்தலாம் ன்னு சொன்னா கேட்க மாட்டீங்கிறான்"

***************************************************************************************************************
'

"நீங்க எப்படி சீரியலிலே நடிக்க வந்தீங்கன்னு நேயருக்கு சொல்லமுடியுமா?"

"தாராளமா! பார்க்கிலே என்னோட லவ்வரோட மொக்கை போட்டுகிட்டிருந்தேன். நான் நல்லா மொக்கை போடுறத நாலு மணிநேரமா கவனித்த டி.வி.காரங்க  'எங்க சீரியலிலே இதுபோல மொக்கை போடுங்கன்னு கூப்பிட்டாங்க' நானும் சரின்னு ஒத்துகிட்டேன் "

******************************************************************************************************************

"நீங்க எப்படி சீரியலிலே நடிக்க வந்தீங்கன்னு நேயருக்கு சொல்லமுடியுமா?"

"தாராளமா! வீட்டிலே  நான் என் மாமியாரை, கணவரை சகட்டுமேனிக்கு திட்டிக்கொண்டிருந்தேன்.  நான் நல்லா திட்டுறதை இரண்டு மணிநேரமா கவனித்த டி.வி.காரங்க  எங்க சீரியலிலே இதுபோல திட்டுங்கன்னு கூப்பிட்டாங்க"  

****************************************************************************************************************

"நீங்க எப்படி சீரியலிலே நடிக்க வந்தீங்கன்னு நேயருக்கு சொல்லமுடியுமா?"

"தாராளமா! ஆபிஸில் மொக்கை போட்டுகிட்டிருந்தேன். நான் நல்லா மொக்கை போடுறத ஒரு மணிநேரமா கவனித்த டி.வி.காரங்க  எங்க சீரியலிலே இதுபோல மொக்கை போடுங்கன்னு கூப்பிட்டாங்க"

**************************************************************************************************************

"நீங்க எப்படி சீரியலிலே நடிக்க வந்தீங்கன்னு நேயருக்கு சொல்லமுடியுமா?"

"தாராளமா! வீட்டிலே கண்டதை போட்டு சமைப்பேன். வாயில் வைக்கவே முடியாது . அதை கேள்விப்பட்ட  டி.வி.காரங்க  எங்க சீரியலிலே இதுபோல பலவற்றை கலந்து புதுப்புது பேரை வைச்சு கண்டதைப் போட்டு சமைங்கன்னு கூப்பிட்டாங்க"

****************************************************************************

* " பல பட அதிபர்கள்  அந்த குறிப்பிட்ட தியேட்டர்லே தான் தங்களுடைய படத்தை வெளியிடனும்ன்னு ஒத்த கால்லே நிக்கிறாங்க? என்ன காரணம்?"

  " ஓ .. அதுவா! தியேட்டர்லே ரசிகர்கள் கை தட்டுராங்கலோ இல்லையோ அஞ்சு நிமிஷத்திற்கு ஒரு முறை பேக் - க்ரவுண்ட் மியூசிக் ஆக விசில், கை தட்டும் சத்தம், சிரிப்பு , கமெண்ட்ஸ்ன்னு ஒலி பரப்புவார்கலாம் "

*************************************************************************************

*  "அந்த டாக்டர் போலின்னு எப்படி தெரிஞ்சது"

"'ஊசி போடுறதுக்கு கை காட்டுங்கன்னு' சொல்றதுக்கு பதிலா காதை காட்டுங்கன்னு சொன்னாரு "

************************************************************

*  "வர வர மனுசனா பொறந்து பிரயோசனமே இல்லை போலத் தெரியுது"  

"ஏன் ? எதுக்காக அப்படி சலிச்சுக்கிறே"

" பின்னே என்ன , பேங்க்காரங்க எனக்கு லோன் கிடையாது ! ஆனா என் மாட்டுக்கு லோன் தர்றதா சொன்னாங்க" 

(((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


*    " இது என்னங்க புது வியாபாரமாத் தெரியுது"

"எதைச் சொல்றீங்க"

" பணம் கொடுக்கிறதைப் பொறுத்து எந்த கட்சியில் வேண்டுமானாலும் எம்.எல்.ஏ , எம்.பி சீட் வாங்கித் தரப்படும்" ன்னு ஒரு போர்டு தொங்குது"

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



" ஏம்பா ! பல குரல்லே மாத்தி மாத்தி நல்லாப் பேசுறேயே ,
நீ எந்த நிகழ்ச்சியிலே கலந்துக்கப் போறே"

" 'நேரலை' நிகழ்ச்சியிலே நானே பல ஆண் , பெண், குழந்தைங்க குரல்லே உலகத்திலே உள்ள பல இடங்களிலிருந்து பேசுவதோடு, நிகழ்ச்சியைப் பத்தி நல்லாப் புகழ்ந்து பேசுறேன்"

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^   




        

No comments:

Post a Comment