Pages

Saturday 25 January 2014

மக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்? HOW PEOPLE ARE SEEN A USUAL PROBLEM ?

மக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்? 
HOW PEOPLE ARE SEEN A USUAL PROBLEM ?
விழிப்புணர்வு பகுதி 
மதுரை கங்காதரன் 

ஒரு சோதனை !
 
* ஒருவரிடத்தில் ஒரு பிரச்சனையை கொடுத்துப் பார்ப்போம். தெரியாத அல்லது பெரிய பிரச்சனை என்று கொடுக்காமல் நடைமுறையில் அவர் கையாளும் பொருளைக்கொண்டு சோதிக்க முடிவு செய்தோம். அதை அவர் எவ்வாறு பார்க்கிறார்கள்  என்பது  தெரிய ஆவலாக இருந்தது. எல்லோருக்கும்  பணத்தை பற்றிய அறிவும் விவரமும் நன்றாகத் தெரியும். ஆகவே அதைக்கொண்டு சோதிக்க முடிவு செய்தோம்.

அதற்காக ஒரு சாதாரண மனிதனிடத்தில் செல்லாத ஒரு 500 ரூபாய்  நோட்டை கொடுப்போம். அவர் அதை என்ன செய்கிறார்? எப்படி அதை கண்டு பிடிக்கிறார் என்பதைப் பார்ப்போம் என்று ஒருவரை நெருங்கினோம்.


ஓரளவு பழக்கமானவரிடத்தில் நானும் எனது நண்பர்கள் (பொது சேவை செய்பவர்கள்) அந்த சாதாரண ஆளிடம் ஒரு 500 ரூபாயைக் கொடுத்து "இந்த ரூபாயில் ஏதேனும் தவறு இருகின்றதா ? அல்லது சரியா இருக்கின்றதா ?" என்று கேட்டேன். அவரோ அந்த நோட்டை நன்றாக திருப்பித்திருப்பிப் பார்த்தார். உடனே ஏதோ ஒன்றை பார்த்தவர் "இந்த நோட்டு செல்லாது" என்று நம்மிடம் கொடுத்தார். நமக்கோ ஒரே ஆச்சரியம் "பரவாயில்லையே ! சரியா கண்டுபிடிச்சுட்டீங்களே! சரி என்ன தவறு இருக்கின்றது" என்பதை கூறுமாறு கேட்டோம். அவர் கூறிதை கேட்ட பிறகு எங்கள் அனைவரின் தலைகள் வேகமாக சுற்றுவதாக உணர்ந்தோம்.

நீங்களே ! கேளுங்கள் . அவர் ஏதோ ஒரு சிறு இடத்தைக் காட்டி "இங்கு 'மை' அதிகமாக இருக்கின்றது. அதை வைத்து தான் சொன்னேன்" என்றார்.

"ரொம்ப சரி தான்" என்று நாங்கள் நொந்து கொண்டோம்.


உங்களுக்காக நாங்கள் சொல்கிறோம். அந்த ரூபாயில் இரண்டு பக்கமும் நமது 'காந்திஜி' யின் படம் உள்ளது. அதை கவனிக்காமல் ஏதோ நுணுக்கமாக பார்கிறேன் பேர்வழி' என்று நினைத்து பெரிதாக உள்ள தவறை காணாமல் விட்டுவிட்டது நமக்கு பல செய்திகளை உணர்த்தியது. அதாவது மக்கள் 

 1. பெரிதாக ஊழல் செய்பவர்கள் , லஞ்சம் வாங்குபவர்களைப் பற்றி கவலை படமாட்டார்கள். குறைவான ரூபாய் வாங்குபவர்களை ஏசுவார்கள்.                   
 
2. பெரிதாக தவறு செய்பவர்களைப் பற்றி கவலை படமாட்டார்கள். சிறிய தவறு செய்பவர்களை உண்டு இல்லை என்று ஆக்குவார்கள்.

3. தேர்தலின் போது ஒரு நாள் கொடுக்கும் விருந்திற்காக ஐந்து ஆண்டுகள் பட்டினியாக கிடப்பதற்கும் தயாராக இருப்பார்கள்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் கால் துட்டுக்கு ஆசைப்பட்டு முக்கால் துட்டை இழப்பது தெரியாமல் வாழ்கிறர்கள். அவர்களால் தான் அரசியல்வாதிகளின் வாழ்க்கை பொன்னாக மலர்ந்து வருகின்றது.

வாழ்க மக்கள் !
வளர்க ஜனநாயகம் !

செழித்தோங்குக அரசியவாதிகள் !

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&     
 

No comments:

Post a Comment