Pages

Saturday 25 January 2014

தலைப்பு : தமிழா! நீ பேசுவது தமிழா! ஆய்வரங்கம் - கவியரங்கம்

19.1.2014 அன்று உலகத் தமிழ் ஆய்வுச் சங்கம், மதுரை 
                                      
               அவர்களால் ஏற்பாடு செய்திருந்த 

                    ஆய்வரங்கம்  - கவியரங்கம் 


            நிகழ்ச்சியில் நான் பாடிய புதுக்கவிதை 

                           மதுரை கங்காதரன் 



               தலைப்பு : தமிழா! நீ பேசுவது தமிழா!

தமிழா !  தமிழ் மொழியில் அந்நிய மொழியை கலந்து பேசுகின்றாயே !
உன் பெயரை தமிழ் பாதி அந்நிய மொழி பாதி கலந்து எழுதுவாயா?

வானவில்லின் அழகு பலவண்ணங்கள் தனித்தனியே இருப்பது தான் 
அறுசுவையின் மகிமையே தனித்தனியாக ருசி தருவதினால் 

நவரசங்களின் அழகு , பாவனைகள் தனித்தனியே காட்டுவதினால் 
நவரத்தினங்களின் அழகு அவைகள் தனித்தனியே பிரகாசிப்பதினால் 

உலக அதிசயங்களின் அழகு அவைகள் தனித்தனியே இருப்பதினால் 
முக்கனிகளின் சுவை அவைகள் தனித்தனியே ருசிப்பதினால் 

மொழிகளின் அழகு அவைகள் தனித்தனியே பேசுவதினால் 
மனிதர்களின் அழகே ஆணும் பெண்ணும் தனித்தனியே இருப்பதினால் 

தனித்தனியாக இருந்தால் தான் முழுமை காண முடியும் 
எல்லாமே கலந்திருந்தால் அரைகுறையாக முடியும் 

பாலில் சிறிதளவு தண்ணீர் கலந்தாலே சுவை குன்றிவிடும் 
அதே பாலில் சிறிதளவு மோர் கலந்தால் என்னவாகும்?

தவறான தாளங்களினால் புதுமையான ஒலிகள் எழும்பலாம் 
காதால் கேட்டு ரசிக்கும்படி இனிமை இருக்குமா?


குயில் என்றாவது காக்கை போல் கரைந்து கலந்து கூவுகின்றதா ?
சிங்கம் என்றாவது மயில் போல் அகவுவதோடு கர்ஜிக்கின்றதா ?

தமிழா! நீ விட்டில் பூச்சியாக இருக்காதே ! அந்நிய மொழி பிரகாசத்தில் மயங்காதே !
அது உன்னை பொசுக்க வந்திருக்கும் 'தீ ஜுவாலை ' என்று மறவாதே !

தமிழா! நீ இலக்கண சுத்தமாக பேசவேண்டாம் ! தமிழ் சொற்களில் பேசலாமே!
தமிழ் மொழி உனக்கு தமிழனாக தமிழ் தாய் கொடுத்திருக்கும் அடையாளம்!

வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் ! பேசுக தமிழ் சொற்களில்!

நன்றி ..  வணக்கம்...


*******************************************************************************************************************

 

No comments:

Post a Comment