Pages

Sunday 3 February 2013

NEW THINGS ARE SOLD ONE - OLD THINGS ARE IN DUST BIN - PUTHU KAVITHAI - புதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு

புதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு 
           NEW THINGS ARE SOLD ONE -
          OLD THINGS ARE IN DUST BIN 
                                    புதுக்கவிதை 
                               மதுரை கங்காதரன் 

பழைய முகங்களுக்கு விடை கொடுக்கிறது 
புதிய முகங்களை வரவேற்பு தருகிறது 
இந்தக்கால இளைஞர்கள்.

பழைய தொலைபேசி சந்தையிலே 
நவீன கைபேசிகள் கடைகளிலே 
இந்த கவர்ச்சி உலகில்.

பழமை நாட்டியம் காணாமல் போனது 
புதுமை நடனம் அரங்கேறுகிறது 
இன்றைய மக்கள் மேலையில்.

பழமை ஊறிய பெண்கள் வீட்டுக்குள்ளே 
புதுமைப் பெண்கள் வலம் வருகிறாள் வெளியே 
இன்றைய புதுமை உலகில்.

பழைய மெட்டுகள் போனது பரண் மேலே 
புதிய பாட்டுகள் இடம் பிடித்தது ரசிகர்கள் மனதிலே 
இன்றைய இசை உலகில்.

பழைமை கல்வி முறை புதைந்தது மண்ணுக்குள்ளே 
புதுமை கல்வி வளருது மண்ணின் மேலே 
இக்கால கல்வி உலகில்.

பழைய படங்கள் போனது பெட்டிக்குள்ளே 
புதிய படங்கள் ஓடுது டி.வி பெட்டியிலே 
இன்றைய சின்னத் திரை உலகில்.

பழைய வாகனங்கள் காயிலான் கடையிலே 
புதுமை வாகனங்கள் 'ஷோ' ரூமிலே 
இன்றைய வாகன உலகில்.

பழமை கலாச்சாரம் வெறுக்கின்றனர் 
புதுமை கலாச்சாரத்தை ஏற்கின்றனர் 
இன்றைய நவீன உலகில்.

பழமை உழைப்பை மறந்துவிட்டனர் 
புதுமை இலவசத்தில் மிதக்கின்றனர்.
இன்றைய வாழ்கையில்.

அரைத்த மாவை அரைப்பதை ஒதுக்குகின்றனர் 
புதுமை பொருட்களை விலைக்கு வாங்குகின்றனர்.
இன்றைய வியாபார உலகில்.

பழமை டிசைன் களை மிதிக்கின்றனர் 
புதுமை டிசைன் களை ஏற்கின்றனர்.
இன்றைய நவ நாகரிக உலகில்.

பழைமை உறவுகளை முதியோர் இல்லத்திலே 
புதுமை உறவுகளோ வசந்த மாளிகையிலே 
இன்றைய குடும்பத்தில் 

ஆனால் என்றாவது தெரியவரும்!

பழைமைகள் கோயில் சிலைகள் 
புதுமைகள் மாயப் பதுமைகள் 
வருங்காலம் தெரிய வரும்.

பழமைகளுக்கு சிவப்பு கம்பளவிரிப்பு 
புதுமைகளுக்கோ கருப்பு கொடி 
எதிர் காலம் உனக்கு புரிய வரும்.

பழமைகள் மதிப்புள்ள சொக்கத் தங்கங்கள் 
புதுமைகளோ முலாம் பூசிய போலி தங்கங்கள் 
காலம் கடந்து நீ உணருவாய்.

நன்றி 

வணக்கம். 

No comments:

Post a Comment