Pages

Friday 7 December 2012

பணப்பெட்டி அரசியல் கொள்கை CURRENCY POLITICS POLICY புதுக்கவிதை

பணப்பெட்டி அரசியல் கொள்கை 
CURRENCY POLITICS POLICY 
புதுக்கவிதை 



காற்றில் பறக்கின்றன 
கட்சிக் கொடிகள் மட்டுமல்ல 
அவர்களின் 
வாக்குறுதிகளும் 
கொள்கைகளும்.



பாம்பு படமெடுத்தால் 
படையும் நடுங்கும் 
பணப்பெட்டி திறந்து காட்டினால் 
கொள்கைகளும் மயங்கும்.

மக்கள் போடுவது ஓட்டு 
அவர்கள் வைப்பதோ வாழ்வில் வேட்டு 
பணப்பெட்டி மாறியதால் 
சவப்பெட்டியிலும் ஊழல்.



லஞ்சம் ஊழல் தெரியாமல் செய்வார் 
தெரிந்துவிட்டால் நிரூபி என்பார் 
நிரூபித்தால் வழக்கை 
சந்திக்க தயார் என்பார்.

விசாரணை குழு அமைப்பர் 
விசாரணை கமிஷன் உருவாக்குவர் 
வழக்குகள் போடுவார் 
வாய்தா வாய்தா கேட்டே 
வழக்குகளுக்கு வயதாகி விடும் அவலம் 
வெள்ளிவிழா பொன்விழா 
கொண்டாடும் வழக்குகளும் உண்டு.



வேட்பாளர்கள் 
பொதுதரிசனம் கொடுத்தவர்கள் 
சிறப்பு தரிசனம் மட்டுமே கொடுப்பார்கள் 
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு.

குடிகாரன் பேச்சு 
விடிஞ்சாலே போச்சு 
மேடைக்கரர்கள் பேச்சு 
இறங்கினாலே போச்சு.



தேர்தலில் நிற்கும்போது ஒரு பேச்சு 
ஜெயித்த பிறகு ஒரு பேச்சு 
பதவிக்காக ஒரு பேச்சு 
ஆட்சியில் அமர ஒரு பேச்சு 
அவர்களுக்குத் தெரிந்த ஒரே பேச்சு 
ஏழை நடுத்தர மக்களை 
ஏமாற்றும் பேச்சு.
அதன் மூலம் பணம் 
சம்பாதிப்பதே உயிர் மூச்சு.



ஐந்தாண்டு பதவிக்கு 
ஆளாய் பறப்பார்கள்.
படிப்பறிவு பட்டம் வேண்டாம் 
பணப்பெட்டி ஒன்றே போதும் 
பதவி பெறுவதற்கு!
ஆண்டியாய் இருந்தவனும் 
அரசனாய் மாறுவான்
தலைவரின் பார்வை விழும்போது.



ஆயுள் முழுவதும் 
ஏமாறுவதற்கு 
மக்கள் தரும் உத்திரவாதம் 
ஐந்தாண்டுக்கு ஒரு முறை 
போடும் ஓட்டு மட்டுமே!



நூறு கோடி மக்களின் 
தலைஎழுத்தை 
முன்னூறு பேர்கள் 
நிர்ணயிக்கும் கூத்து.



தலைவரின் சொல்லை 
தட்டாமல் செய்பவன் 
பிசகாமல் தலையாட்டுபவன் 
தவறாமல் குடை பிடிப்பவனுக்கு 
தலை சிறந்த உயர் பதவி.
இதற்கு பட்டம் அறிவு வேண்டுமா?



தவறாமல் ஓட்டு போட வேண்டுமாம் 
நேர்மை தவறி நடப்பவர்களுக்கு.
அடிதடி சண்டைகள் அரங்கேறும் 
கூச்சல் குழப்பங்கள் தொடரும் 
பள்ளியில் அல்ல 
சட்டமன்றத்தில் 
பாராளுமன்றத்தில் 
அவர்கள் மேல் தவறில்லை 
பாதி தவறு தலைவரின் மேல் 
மீதி பாதி மக்களின் மேல்.
பள்ளிக்கூடம் சென்றிருந்தால் 
ஒழுக்கம் அமைதி தெரிந்திருக்கும்.



சட்டங்கள் எல்லாம் 
சாதாரண குடிமக்களுக்கு.
அரசியல் பதவி 
செல்வாகுள்ளவர்களுக்கு 
விதி விளக்கு.



ஏழை பங்காளன் என்பான் 
விலைவாசியை குறைப்பேன் 
அதைச் செய்வேன் 
இதைச் செய்வேன் என்பான் 
வாய்ஜாலம் காட்டி 
மக்களை மயக்குவார்.



ஆயிரம் போதாதென்பார் 
லட்சத்தை துச்சமாக மதிப்பர் 
கோடியை நோக்கி ஓடுவர் 
கோடான கோடிக்கு குறிவைப்பார்.

காகிதத்தின் தன்மை 
இரும்புக்குத் தெரியுமா?
ஏழையின் கஷ்டம் 
அரசியல்வாதிகளுக்குத் தெரியுமா?



விலைவாசி நெருப்பு 
லஞ்சம் ஊழல் வேள்வியில் 
பொசுங்குவது காகிதம் மட்டுமே 
இரும்பல்லவே.



மக்கள் குடித்துக் கெட்டாலும் 
பரவாயில்லை 
புகை பிடித்து அழிந்தாலும் 
பரவாயில்லை 
பசியால் வாடி செத்தாலும் 
பரவாயில்லை 
உயிருள்ளவரை பதவி சுகம் 
வேண்டுமாம்.



சொகுசாய் பதவித் தேரில் 
பவனி வர 
மக்களை மாடாய் மதிப்பர்.
போதாதற்கு சுமை சுமத்துவர் 
வரிச்சுமை விலைவாசி சுமை 
வருடம் முழுவது மாறி மாறி.

கோடிக்கணக்கில் ஊழல் 
செய்தவர்களுக்கு நீதிமன்றத்தில் 
சிவப்பு கம்பள வரவேற்ப்பு. 

ஆயிரம் ஐநூறு 
லஞ்சம் பெற்றவர்களுக்கோ 
உடனே தண்டனை.

அனைவருக்கும் 
திருப்தி செய்ய முடியாது தான்!



அரசாங்கம் கொடுக்கும் 
இரு கைகள் நிறைய சம்பளம் போதாதா?
லஞ்சம் தடுக்க முடியாதா?
ஊழலை ஒழிக்க முடியாதா?
கடமையைச் செய்ய இயலாதா?
சட்டத்தை மதிக்க முடியாதா?
நேர்மையாக கடைபிடிக்க இயலாதா!
சத்தியத்தை தவறாமல் இருக்க முடியாதா?
மக்களுக்காக ஆட்சி கிடையாதா?

மக்கள் வாழ்வு மலர 
மக்கள் ஏக்கம் தடுக்க 
மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க 
என்று விடிவுக்கு வரும் 
பணப்பெட்டி கலாச்சாரம்.





No comments:

Post a Comment