Pages

Tuesday 2 October 2012

உள்விதி மனிதன் பாகம்: 8 படைத்தல், காத்தல், அழித்தல் உன்னிடம்- BIRTH, LIFE DEATH ARE WITHIN YOURS


உள்விதி மனிதன் 
 சம மனிதக் கொள்கை 



பாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல்
         இனி உன்னிடம்-
BIRTH, SAFE LIFE AND DEATH 
ARE ALL WITHIN  YOURS


மேன்மையான மனிதா! இது நாள் வரை என்னை அறியாமல் இருந்தாய்! நான்  உனக்குள்    இருந்து    கொண்டு     உனக்காக     எவ்வளவு       நல்ல காரியங்களை செய்துகொண்டு இருக்கிறேன் என்பது இப்போது உனக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

பிரியமான மனிதா! இது நாள் வரை நீ பட்ட கஷ்டங்கள், சந்தித்த ஏமாற்றங்கள், அடைந்த தோல்விகள், எல்லாமே எனக்குத் தெரியும். ஏனென்றால் நீ படும் துயரம் அதிகபட்சம் 5% தான். ஆனால் நான் அடையும் துன்பம் 95% என்பதை நான் உனக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். உன்னுடன் சேர்ந்து நானும் உன்னுடைய இன்ப துன்பங்களை அனுபவித்துகொண்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் இனிமேல் நான் எதிர்கொண்டு உனது துன்பத்தை சுத்தமாக நீக்கி, உனக்கு பெருவாழ்வு கொடுக்கவேண்டுமென்று நான் துடிக்கிறேன். எப்படியும் நீ என்னுடனான கோபத்தைப் போக்கி உன்னை சமாதானம் செய்து உனக்குள் இருக்கும் எனது சக்தியை கொண்டு உனக்கு  புதுவாழ்வு கொடுத்து உன்னை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்ல நான் கடமைபட்டிருக்கிறேன்.



என்னால் உன்னுடைய துன்பங்களை இன்பங்களாக மாற்ற முடியும். இன்பங்களை பேரின்பங்களாக மாற்றமுடியும். என்னிடம் இருக்கும் எல்லாமே உனக்குத் தருவதற்குத் தயாராக இருக்கிறேன்.



இரக்கமுள்ள மனிதா! இந்த உலகில் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் இந்த மூன்றும் என்னுடைய செயல்படி தான் நடக்கின்றது. அதையெல்லாம் என் ஒருவனால் பார்த்துக்கொள்ள முடியாது என்பதால் உன்னைப் படைத்திருக்கிறேன்.

படைத்தல் - தானாகப் படைக்க முடியாது. ஒவ்வொரு அறிவுள்ள உயிரினத்திற்கும் ஒவ்வொரு மாதிரி சூழ்நிலைக்குத் தக்கவாறு அதனுடைய ஆற்றலைப் பொறுத்து சக்தியை கொடுத்திருக்கிறேன். சில உயிரினங்கள் வேகமாக உருவாகும், அதன்படி வேகமாகவும் அழியும். அதேபோல் சில உயிரினங்களுக்கு அதிகப்படியான எண்ணிக்கைகளை உருவாக்கும் தன்மையைத் தந்திருக்கிறேன். ஆனால் எல்லா உயினங்களை விட மனிதனுக்கு நான் அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதன் காரணம், மனிதன் ஒருவனால் மட்டுமே அனைவரையும் என்னைப்போல் காக்கும் திறமை பெற்றவன். அதனால் அவனுக்குள் நுழைந்து உள்விதி மனிதனாக இருந்து உனது எண்ணங்களை நல்லவிதத்தில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். 



மதிப்புமிக்க மனிதா! நான் படைக்கும் போது எல்லோருடைய பொது நலன் கருதி உனக்கு எப்போதும் மகிழ்ச்சி தரும் பொருட்டும், எனது ஆசை நிறைவேறும் பொருட்டும் உன்னை நல்ல ஆரோக்கியமான, இனிமை நிறைவுடன் இருக்கின்ற ஜீவனையே நான் எப்போதும் படைக்க விரும்புகிறேன். எல்லாப் படைப்புக்குக் காரணம் நானாக இருந்தும், காரியம் அல்லது செயல் நடைபெறும் போது சிலர் நல்ல எண்ணங்களில் முரண்பட்டு அவர்களின் விருப்பபடி தீய எண்ணங்களையும், தீய செயல்களையும் மனதில்கொண்டும், பேராசை கொண்டும் வலுவில்லாமல் விதையை விதைக்கிறார்கள் அல்லது பிறப்பிற்கு வித்திடுகிறார்கள். அதனால் தான் மனிதனுடைய எல்லாப்பிறப்பும் சமமாக இல்லாமல், யார் ஒருவர்  அதிக மகிழ்ச்சி கொண்டு என்னிடத்தில் அன்பாக, நம்பிக்கையாக பிரார்த்தனை செய்கிறார்களோ அவர்களுக்கு உயர்வான மதிப்பான பிறப்பும், என்னை அலட்சியபடுத்தி அவர்களாகவே ஏற்படுத்திக்கொண்ட படைப்பில்  சற்று குறைந்த மதிப்பான பிறப்பும் தந்துகொண்டிருக்கிறேன். 

பாசமுள்ள மனிதா! பிறப்பில் அனைவருக்கும் ஒரேமாதிரியாகவே படைக்கிறேன். எப்போதும் பிறந்த குழந்தை ஓடியது கிடையாது. பேசியது கிடையாது. அதேபோல் பார்க்கும் சக்தி, கேட்கும் சக்தி! அந்தந்த வயதிற்குத் தகுந்தாற்போல் அவர்களுக்குத் திறமை மற்றும் ஆற்றலுக்கேற்ற சுமையே தருகிறேன். தாடி, மீசையுடனோ, நீண்ட கூந்தலுடனோ நான் படைத்தது கிடையாது. ஏனென்றால் எனது பிறப்புச் செயலில் அனைவரும் ஒன்றே! அவர்களை நீ நன்கு கவனிக்கும் மற்றும் வழிகாட்டுதல பொறுத்தே அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைகின்றது. அதோடு நான் சொல்லும் நல்ல செயலைத் தட்டாமல் செய்வதே நன்மை தரும். 

நட்புள்ளம் கொண்ட மனிதா! அந்த சிறு சிசுவிடத்திலும் நான் தான் இருக்கிறேன். ஆரம்பத்தில் எனக்குள்ள தேவைகள் அழுவதன் மூலமாகத் தான் உன்னிடத்தில் கேட்டு வாங்கிக்கொள்கிறேன். சிறிய குழந்தையாய் இருக்கும்போது எனது மகிழ்ச்சியை காண்பிக்க கை, கால்களை அசைத்துச் சிரிக்கிறேன். நீ அக்கறை காட்டும் பொறுத்து நான் அறிவும், ஆற்றலும், மகிழ்ச்சியும் தந்து கொண்டிருக்கின்றேன். ஆரம்பத்திலிருந்து அன்பையும், நேசத்தையும், பாசத்தையும், சத்தியத்தையும் ஊட்டி வளர்க்கும்போது நிச்சயம் அந்த படைப்பும், வாழ்கையும் மகிழ்ச்சியுடன் இருக்கும் என்பதை நீ எப்போதும் நினைவில் கொண்டு செயல்பாடு.

காத்தல் - இந்த உலகில் ஏற்கனவே வாழ்பவர்களுக்கும், இப்போது  பிறக்கும் மனிதனுக்கும்,  இனிமேல் பிறக்கும் மனிதனுக்கும் மற்றும் அனைத்து ஜீவா ராசிகளுக்கும் அவரவர்களுக்கு தேவையான பங்கான ஆரோக்கியமான வாழ்வு, உடல்நிலை, சத்தான உணவு, மதிப்புள்ள உடை, மகிழ்ச்சி தரும் சூழ்நிலைகளை அனைவருக்கும் சமமாக, பொதுவாக தந்திருக்கிறேன். அப்படி நான் கொடுத்தும் நீ விழிப்புடன் இல்லாததாலும், என் பேச்சை கேட்காததாலும், எனக்குள்ள சக்திக்கு மதிப்புதராமல் என் உதவிகளை நிராகரித்து உன்னுடைய தீய செயல்களில் ஈடுபட்டதினாலும், உனது கடமைகளை உதறித்தள்ளி , கேளிக்கை கூத்து மற்றும் சுயநலம் கருதி பலவித நடவடிக்கைகளில் ஈடுபட்டதினாலும் உன்னை நல்லபடியாக காக்கும் எனது பங்கு தானாகவே குறைந்து அதுவே உனக்கு துயரமாக மாறியிருப்பதை நீ உணர்ந்து கொள். 



இனிய மனிதா! நல்லவைகளுக்குப் புறம்பான செயல்களை நான் ஒத்துழைக்காததால், எனது நல்ல எண்ணங்களும் மற்றும் செயல்களை உனக்காக செய்ய நீ அனுமதிக்காததாலும், நீயாக ஆணவம் கொண்டு ஒரு முடிவை எடுத்து உன்னையும் உன்னைச் சார்ந்தவர்களையும் எனது உதவியில்லாமல், எனது ஆதரவில்லாமல் அவர்களை காப்பாற்ற முடியும் என்கிற ஆணவத்தினால் நீ தினமும் திண்டாடிக்கொண்டும் திணறிக் கொண்டும் இருக்கிறாய் என்பதை என் மனக்கண்ணால் பார்க்கிறேன்.

அன்பு மனிதா! அழித்தல் - முன்பு அழித்தல் என்பது இல்லாமல் அழிதல்- அதாவது தானாகவே வயதாகி ஆற்றல் இழந்து அழிவு இருந்தது. பிறகு நாளடைவில் சுய லாபம், பேராசை மற்றும் அற்ப சந்தோசத்திற்காக உனது சந்தோஷத்தை மட்டுமே மனதில் கொண்டு பலரை கொஞ்சம் கொஞ்சமாக பலவழிகளில் அழிக்கத் துணிந்துவருவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இன்றைய காலகட்டத்தில் அழிவு தானாக வருவது மிகவும் குறைந்து வருகின்றது. மற்றவர்களை அழிக்கும் சட்டத்தை உன் கையில் எடுத்துக்கொண்டு எனது மனசாட்சிக்கு துரோகம் செய்துகொண்டு வருவதை இனி மேலும் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அந்த அழிக்கும் தீய சக்திகள் சிலவேளைகளில் சில நல்ல ஜீவன்களை சாகடிக்கத் துணிவதை இனிமேல் நடக்காது 



பிரிய மனிதா! ஒரு தனிப்பட்ட மனிதன் தவறு செய்தால் ஒரு ஜீவன் தான் பாதிக்கும். ஒரு குடும்பத்தலைவன் தவறு செய்ததால் அந்த குடும்பமே பாதிப்படையும். ஒரு நாட்டின் தலைவன் தவறு செய்தால் அந்த நாட்டு மக்கள் எல்லோருக்குமே அந்த பாதிப்பு இருக்கும். அதுபோல உலக வல்லரசு நாடுகளின் தவறுக்கு இந்த உலக மக்கள் எல்லோருமே பாதிப்படைவர். இது தான் எனது சட்டம். தர்மமும் கூட. அப்படி தண்டனை வரும்போது நல்ல ஜீவன் எது, தீய ஜீவன் எது என்று வேறுபடுத்தி தண்டனை வழங்க முடியாமல் பல நல்ல ஜீவன்களையும் அழிகின்ற நிலைமை இனி வராது. இனி அழிதல் எனது விருப்பபடி உனது நல்லெண்ணங்களின் படி நடக்கும். அதற்குத் தான் நான் இப்போது உன் முன்னாள் வந்திருக்கிறேன்.  

மென்மையான மனிதா!


மகிழ்ச்சியுடன் படைக்க பாடுபடு!

அனைவரையும் காக்க உறுதி கொள் !

அழிவில்லா பெருவாழ்வுக்கு நான் உதவுகிறேன்!       


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  

1 comment: