Pages

Monday 20 August 2012

பாகம் - 5 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 தரச் சான்று -


பாகம் - 5 நிறுவன வெற்றிக்கு உதவும் 
ஐ . எஸ். ஒ 9001 : 2008 தரச் சான்று 


புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், வியாபார அபிவிருத்தி செய்வதற்கும் மிகச்சிறந்த வழிமுறைகள்.

லாபம் தரும் வழிகள் 

ஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும் 




ஐ.எஸ்.ஒ (ISO 9001:2008 - Quality Management System) நடைமுறையினை ஒரு பஸ் ஓட்டுவதை உதாரணமாக கொண்டு விளக்கலாம். 

  



* நோக்கம் (Scope) : மக்களை திருப்தியான (Customer Satisfaction)  சேவைகளின் (Service)  மூலம் ஓரிடத்திலிருந்து அவர்கள் செல்லும் இடத்திற்கு அழைத்துச்செல்வது. 

* அதை போக்குவரத்து சட்டதிட்டத்தின்படி (Road and Traffic rules) பின்பற்றுவது என்பது  ஐ.எஸ்.ஒ 9001:2008  (Quality Management System) ன்  படிக்கு ஒப்பிடலாம். 

 

* எங்கிருந்து எதுவரை எப்படி யாரைக்கொண்டு செல்லவேண்டும் என்பது தர கொள்கைக்கு (Quality Policy) ஒப்பிடலாம்.

*எவ்வளவு நேரத்தில் யார் யார் மூலம் எத்தனை முறை எத்தனை பேரை அழைத்துச்செல்வது என்பது அதை அடைவதற்க்கான வழிமுறைகள் (Quality Objectives ) என்று கொள்ளலாம்.  

* பஸ் என்பது ஒரு நிறுவனம் (Organization or Company or Institution0 என்று வைத்துக் கொள்வோம். பஸ்ஐ ஓட்டவேண்டுமென்றால் போக்குவரத்து சட்டதிட்டங்களுக்கு (Road and traffic Laws) உட்பட்டு ஒட்டவேண்டும்.

அதேபோல் ஒரு நிறுவனத்தை நடத்தவேண்டு மென்றால் உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு (Inspector of Factories and labour act) உட்பட்டு நடத்தவேண்டும்.

*  பஸ் முறையாக போக்குவரத்து துறையில் பதிவு  (Registration) செய்திருக்க வேண்டும். ஓட்டுனர் முறையாக 'லைசென்ஸ்' (Driving License) பெற்றிருக்க வேண்டும். அதில் எத்தனை பேர் ஏற்றிக்கொள்ளலாம் (No.of passengers) , இன்ஜின் திறன்(Engine capacity)  எவ்வளவு ? யார் பேரில் எந்த விலாசத்தில் இருக்கின்றது (owner name and address) , அவர்களுக்கான வண்டி எண்  (Registration Number)   போன்ற இருக்கும்.

 

நிறுவனமும் தொழில் அல்லது பொருட்களை தயாரிப்பதற்க்கான அனுமதி (லைசென்ஸ் -Factory and  Manufacturing License) ) பெற்றிருக்க வேண்டும். அதில் எத்தனை பேர் (Number of workers) வேலையில் அமர்த்தலாம் , எவ்வளவு மின் திறன் (Electric Power) தேவைப்படும் ? யார் பேரில் எந்த விலாசத்தில் ( Name of the Owner and Address) இருக்கின்றது , அவர்களுக்கான லைசென்ஸ் எண் (Manufacturing License Number) போன்ற விவரங்கள் இருக்கும்.



* லைசென்ஸ் முறைப்படி சரியான நேரத்தில் புதுபிக்க (Renewal) வேண்டும்.   

அதேபோல் நிறுவனத்தின் 'லைசென்ஸ்' ம் அந்த அந்த நேரத்தில் கட்டாயம் புதுபிக்கப்பட (Renewal) வேண்டும்.  

* முறைப்படி இன்சூரன்ஸ் (Insurance) மற்றும் சாலை வரி (Road Tax) மற்றும் இதர வரிகள் (Extra Taxes) செலுத்தியிருக்க வேண்டும்.

நிறுவனமும் தகுந்த பாதுகாப்புடன்(Safety Measures)  , தொழில் வரி , விற்பனை (Sale Tax), சேவை வரிகள்(Service Tax)  போன்றவை முறையாக செலுத்தியிருக்க வேண்டும்.

* பஸ் ஓட்டுவதற்கு கட்டாயமாக மாசு சான்று (Emission / Pollution License) பெற்றிருக்க வேண்டும்.

நிறுவனமும் மாசு கட்டுப்பாடு சான்று (Pollution Consent ) கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

* பஸ் ல் பயணம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தரத்துடன் (Quality) குறைவில்லாத திருப்தியான  சேவை (Customer Satisfaction)  அளிக்கவேண்டும். அப்படி செய்வதால் இருக்கின்ற வாடிக்கையாளர்களோடு புது புது வாடிக்கை (New Customers) யாளர்களும் தொழிலுக்கு பெரும் ஆதரவு தருவார்கள். திருப்பதியான சேவை இல்லாது போனால் இருக்கின்ற வாடிக்கையாளர்கள் இழந்து தொழிலில் தொய்வு ஏற்ப்படும் வாய்ப்பு ஏற்ப்படும்.வெறும் பஸ் ஐ ஓட்டினால் டீசல். சம்பளம், பராமரிப்பு அனைத்தும் வீண் (Waste) தான். 

 

நிறுவனமும் தங்களது தயாரிப்பு பொருட்களை வாடிக்கையாளர்களின் திருப்திக்காக (Customer Satisfaction)  சிறந்த தரமான பொருருட்களை (Best Quality Products) குறைந்த விலையில் (Less price)  குறித்த நேரத்தில் வழங்க வேண்டும் (On-time delivery) . அப்படி செய்தால் தான் இருக்கின்ற வாடிக்கையாளர்கள் வியாபாரத்திற்கு நல்ல ஆதரவு தருவார்கள்.புதிய வாடிக்கையாளர்கள் சேருவார்கள்.வியாபாரமும் அமோகமாக பெருகும். பொருட்கள் தரமாக இல்லாமல் இருந்தால் கூடிய விரைவில் அனைத்து வாடிக்கையாளர்களையும் இழந்து வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும் நிலைமை உருவாகிவிடும்.


*  பஸ் ன் நான்கு சக்கரங்கள் முறையே 1. மார்கெட்டிங் (Marketing) 2. கொள்முதல் (பர்சேஸ் - Purchase) 3. உற்பத்தி மற்றும் சேவை (Production and service)   4. தரம் மற்றும் தரக்கட்டுபாடு (Quality and Control )என்பதாகும்.
இந்த நான்கு சக்கரத்தில் சக்தியுள்ள காற்று - Air  (தொழிலாளர்கள்) இருந்தால் தான் சக்கரம் இலகுவாக ஓடும். அதாவது நான்கு துறைகளில் பொறுப்புள்ள (Responsible) சரியான தகுதியுடைய (competence)  தொழிலாளர்கள் இருந்தால் தான் வியாபாரம் குறைவில்லாமல் ஓடும். வாடிக்கையாளர்களும் திருப்தியுடன் தரமான பொருட்களை வாங்கி வியாபாரத்திற்கு பெரும்மாதரவு தருவார்கள்.


* பஸ் டிரைவர் தான் ஐ.எஸ்.ஒ 9001:2008 ன் மேலாண்மை பிரதிநிதி (Management Representative - MR)

* பஸ் கண்டக்டர் தான் மனித வள மேம்பாடு கவனிப்பவருக்கு ஒப்பானவர் (HR - Resource Management) . அவர் பஸுக்க்கு வேண்டிய வசதிகள் (Infra structure) , பாதுகாப்பான சூழ்நிலைகள் (Good work environment)  , தேவைகள் கொடுப்பது போல் நிறுவனத்திற்கு சரியான பதவியில் தகுதியுடைய ஆட்களை நியமிப்பது, பயிற்சி (Training)  மற்றும் விழிப்புணர்வு (Awareness) தருவது.நிறுவனந்தில் பாதுகாப்பாக சிறந்த சூழ்நிலையை கொடுப்பது. உற்பத்திக்கு தேவையான உபகரணம் மற்றும் சேவைகளை (Provision of Resource related to Production and service) செய்வது.

* பஸ்ஸில் பிரச்சனை மற்றும் இயந்திர கோளாறு (மெக்கானிகல் அல்லது எலெக்ட்ரிகல் - Mechanical and electrical )ஏற்பட்டால் அதை பராமரிப்பு துறை (Maintenance Department)  கொண்டு சரிபன்னுவது.

* வண்டி ஓடுவதற்கு தேவையான டீசல் ஊற்றுவது பர்சேஸ் துறைக்கு ஒப்பிடலாம்.பகல் நேரத்தில் டீசல் ஊற்றாமல் இரவு நேரத்தில் ஊற்றி என்ன பிரயோஜனம். 
அவர்கள் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள் (arrangements of Raw material, Packing Materials, spares and others) , பேக்கிங் பொருட்கள் மற்றும் இதர சாமான்கள் வாங்கித்தருவது. ஏனெனில் இவைகள் இருந்தால் தான் பொருட்களின் உற்பத்தி நடக்கும்.
சரியான நேரத்தில் வாடிக்கையாளர் விரும்பும் நேரத்தில் பொருட்களை விநியோகம் செய்யவிட்டால் வியாபாரம் நடக்காது.

* எல்லாம் சரியாக இருக்கின்றதா என்பதை தரக்கட்டுப்பாடு சமம்.

டிரைவர், கண்டக்டர் (conductor) , முதலாளி  மற்றும் செக்கர் ஆகியோர் அக தணிக்கையாளர் (Internal Auditors).

* செக்கரின் (Checkers )வேலை தரத்தை உறுதி செய்வது சிறு சிறு தவறுகள் (Non-Conformity - NC  ) கண்டுபிடித்து  திருத்தி சரி செய்யச் சொல்வது (Corrective Action - CA) . மீண்டும் வராமல் தடுப்பது (Preventive Action - PA) என்பது முக்கியம்.

* டிராபிக் போலீஸ் அவ்வப்போது வண்டியில் எல்லாம் சரியாக சட்டதிட்டத்தின் படி நடக்கின்றதா என்பது துறை ஆடிட் ( Surprise Audit by department) சமம்.

* வருடா வருடம் குறித்தநேரத்தில் போக்குவரத்து துறை கண்காணிப்பவர் பஸ்ஸை ஆய்வு செய்வது ஐ.எஸ்.ஒ 9001:2008 கடுமையான மேற்ப்பார்வைக்குச் சமம் ( ISO Surveillance Audit ). அவர்கள் ஏதேனும் தவறுகள் கண்டுபிடித்தால் உடனே சரி செய்வது போல் ஐ.எஸ்.ஒ தணிக்கையாளர் (ISO Auditor) ஏதேனும் தவறு கண்டுபிடித்தால் உடனே சரிசெய்யவேண்டும். அவர்களின் பரிந்துரைகளை (Recommendation)  தவறாது கடைபிடிக்க வேண்டும்.

* அவ்வப்போது ஏற்படும் குறைகள் (NCs) , மாற்றங்கள் (Modifications)  போன்றவை கூட்டம் (Meeting)  போட்டு முடிவு எடுப்பதுபோல் மேலாண்மை பரிசீலனை கூட்டம் (Management Review Meeting) நடைபெறுவதற்கு சமம்.

எப்போதும் ஞாபகம் தேவை: 


பொருட்களின் விலையோடு , நிர்வாகம் செய்யும் தவறுகளுக்கும் (Wrong Process or rework)  , ஏமாறுதலுக்கும் (Purchasing materials with high price) விலையைச் சேர்த்தால் பொருட்களின் அடக்கவிலை மற்றும் விற்பனை விலை கூடும். வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்குவது குறைந்து விடும். வியாபாரம் குறையும். ஆக நிறுவனம் ஏமாறாமல், தவறுகளை குறைத்துக் கொண்டாலே விலை குறையும். நிறைய வாடிக்கையாளர்கள் பொருட்களை திருப்தியுடன் வாங்கிச்செல்வார்கள்.



இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை கிளிக் செய்து  நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    

No comments:

Post a Comment